அரசியல்வாதியின் மகனொருவர் செலுத்திய வாகனம் கொழும்பில் விபத்து

Sri Lanka
By Nafeel May 07, 2023 03:09 PM GMT
Nafeel

Nafeel

கொழும்பு, பம்பலப்பிட்டி கடற்கரை பிரதேச வீதியில் 18 வயதான தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய சொகுசு ஜீப்பொன்று இரண்டு கார்கள் மற்றும் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (5) இடம்பெற்றுள்ளது.

குறித்த பல்கலைக்கழக மாணவன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் என்ற உத்தியோகபூர்வமற்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜீப்பை செலுத்திய மாணவன் அதிர்ச்சியடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்