மாணவர்களின் மின்னஞ்சல் கணக்கு தொடர்பில் பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
பாடசாலை மாணவர்களுக்கான மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் போது பெற்றோரின் தரவுகளை உள்ளிடுவதை தவிர்க்குமாறு பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன் மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் போது பிள்ளைகளின் சரியான வயதையும் உள்ளிட வேண்டும் என்று பொலிஸ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்குகளை அமைக்கும் போதும்
பெற்றோரின் தரவை வழங்கினால் பிள்ளைகளுக்கு எந்த இணையதளத்தையும் அணுகும்
வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில், பிள்ளைகளின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை அளித்தால் இணையதள அமைப்பே திறன் மற்றும் அணுகலை கட்டுப்படுத்தும் என்று பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு கூடி விவாதித்த போதே அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.