பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் விமான படைவீரர் பலி

Sri Lanka Police
By Kamal Apr 08, 2024 01:22 AM GMT

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் விமானப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பாதுக்க அங்கமுவ பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேடப் படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் விமான படைவீரர் பலி | Police Shooting Killed Airmen

விசாரணைகள் 

சோதனைச் சாவடியொன்றிற்கு அருகாமையில் பொலிஸாரின் உத்தரவினை மீறி மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் பதில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் நடத்திய தாக்குதலில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விமானப்படை வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.