மன்னாரில் இளம் பெண்ணினின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Sep 30, 2024 03:13 AM GMT
Chandramathi

Chandramathi

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தவறான முடிவெடுக்க முயன்ற பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்ற பெண்ணை மலலசேகர (41308) என்ற பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (29) காப்பாற்றியுள்ளதாக தெரிய வருகிறது.

கடிதம்

மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

மன்னாரில் இளம் பெண்ணினின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி | Police Sergeant Saves Woman S Life

பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம் தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு சார்ஜன்ட் நீங்கள் யார் என்று தமிழில் கேட்க அந்த பெண், தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை பொலிஸ் சார்ஜென்ட்டின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார்.

பாதுகாப்பு

சம்பவத்தை அவதானித்த பொலிஸ் சார்ஜன்ட், குறித்த பெண் தவறான முடிவெடுக்கப்போவதாக சந்தேகித்து துரத்திச் சென்றுள்ளார்.

மன்னாரில் இளம் பெண்ணினின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி | Police Sergeant Saves Woman S Life

இதன்பின்னர் பாலத்தின் பாதுகாப்பு சுவரில் ஏறி கடலில் குதிக்க தயாராகிய பெண்ணின் காலை பிடித்துக் காப்பாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

சார்ஜன்டினால் காப்பாற்றப்பட்ட 24 வயதுடைய பெண் மன்னார் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.