இவரை தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka
By Mayuri Feb 18, 2025 06:13 AM GMT
Mayuri

Mayuri

கடந்த வருடம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர், மற்றுமொரு மோட்டார்சைக்கிளில் பயணித்த பெண் உட்பட இருவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்

காலி, படபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் “வெல்லகே சமத்” என்ற, சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் | Police Serching Suspect

இந்நிலையில், பொலிஸார் சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் - 071 8591484

எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவு - 091 2291095 

Gallery