பொலிஸாரின் விடுமுறை ரத்து! பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Police
By Fathima Nov 28, 2025 06:00 AM GMT
Fathima

Fathima

பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.

விடுமுறை ரத்து

மறு அறிவித்தல் வரையில் இந்த விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விடுமுறை ரத்து! பொதுப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Police Officers Leave Suspended

நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் அனர்த்த நிலைமைகளில் ஆயத்த நிலையில் இருக்கவும் இவ்வாறு பொலிஸாரினதும் சிவில் பாதுகாப்புப் படை அதிகாரிகளினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.