தாய் - மகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி: அம்பாறை அதிர்ச்சி சம்பவம்
அம்பாறை - மொனராகலை எல்லைப் பகுதியன கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மூவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாகியுடன் பொலிஸ் நிலையத்தில்
இருந்து வெளியேறி சக பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்று அவரை சுட்டுக்
கொன்று விட்டு அந்த பகுதியிலுள்ள மற்றொரு வீட்டில் இருந்த இரு
பெண்களை சுட்டு கொன்றுவிட்டு தனக்குத்தானே துப்பாகியில் சுட்டு தற்கொலை செய்து
கொண்டதாக தெரிவிக்கப்ப்டகிறது.
குறித்த கொலை சம்பவம், நேற்று (4) இடம்பெற்றுள்ளது.
மொனராகலை மாவட்ட பொலிஸ்
இது தொடர்பில்தெரியவருவதாவது,
''மொனராகலை மாவட்ட பொலிஸ் பிரிலுள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் அதிகாரியான துசிரகுமார சம்பவதினமான சனிக்கிழமை இரவு கடமையை பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கியுடன் கடமையாற்றிவந்துள்ளார்.
இந்த நிலையில் அதிகாலையில் தனது ரி.56 ரக துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில்
இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறி, அவருடன்
கடமையாற்றி வந்த நாமல் ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான லஹிரு
உதார வீட்டிற்கு சென்று அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து அவர் மீது
துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளாதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி நாமல் ஓயாவில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட நெல்லிகலை என்ற பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றினுள் சென்று அங்கிருந்த 54 வயதுடைய பெண் ஒருவரையும் அவரது 17 வயதுடைய மகளையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸ் அதிகாரிக்கும் உயிரிழந்த
அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
அதேவேளை காணிபிரச்சனை காரணமாக குறித்த இரு பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |