பொத்துவிலில் முகநூல் பிரச்சினையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி

Sri Lanka Police Facebook Ampara Eastern Province Crime
By Rakshana MA Mar 26, 2025 10:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் திருமண உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த பொலிஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் “மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் மலசலகூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளர் கைது

மட்டக்களப்பில் மலசலகூடத்தில் உணவு தயாரித்த உரிமையாளர் கைது

பொத்துவில் பொலிஸ் நிலையம்

திருமணம் முடித்துள்ள பொலிஸ், பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடமையாற்றும் போது அங்கு முறைப்பாடு ஒன்று செய்ய சென்ற பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்தியுள்ளார்.

பொத்துவிலில் முகநூல் பிரச்சினையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Police Officer Arrested Over Facebook Issue

பழக்கம் ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் வீட்டிற்கு அருகிலுள்வர்கள் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து அவர் பாணமை பொலிஸ் நிலையத்துக்கு இடமமாற்றம் செய்யப்பட்டார்.

அதனை தொடரந்து அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டு கடமை புரிந்துவந்துள்ள நிலையில் பொத்துவில் பிரதேசத்துக்கு சென்று அங்கு குறித்த பெண்ணுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டு வந்துள்ளபோது அதனை புகைப்படம் எடுத்து முகநாலில் தரவேற்றம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் தொடர்பான சுற்றறிக்கை வெளியானது!

விளக்கமறியல் உத்தரவு

இதனையடுத்து குறித்த பொலிஸ் பொத்துவில் பொலிஸ் நிலையத்துக்கு சம்பவதினமான இன்று வரவழைத்ததையடுத்து.

பொத்துவிலில் முகநூல் பிரச்சினையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Police Officer Arrested Over Facebook Issue

அவர் அங்கு சென்ற நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்தவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவி தெரிவு

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவி தெரிவு

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW