மரிக்கார் எம்.பி சபையில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சருக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.
சீருடை அணியாத விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவால் நேற்று (18.11.2025)பிற்பகல் 2:39 மணிக்கு நாடாளுமன்றத்திலிருந்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளியே அழைத்துச் செல்லப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொலைபேசியில் இருந்த புகைப்படத்தைக் காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
இதன்பின்னர், தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால்,பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவே தோன்றுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சிறப்பு பாதுகாப்பை ஏன் வழங்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.