காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாமல் தெரிவித்துள்ள விடயம்
அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயத்தை தெற்கைப் போன்றே வடக்கிலும் சென்று நான் கூறி வருகிறேன். சில தரப்பினரைப் போன்று வடக்கில் ஒன்றையும் தெற்கில் ஒன்றையும் நாங்கள் பேசப் போவதில்லை.

காணி, பொலிஸ் அதிகார கோரிக்கை
இதனால் வடக்கின் சில அரசியல் கட்சிகளினால் எம்முடன் இணைந்து செயற்பட முடியவில்லை. வடக்கின் ஒரு தொகுதி இளைஞர்கள் தற்பொழுது காணி, பொலிஸ் அதிகாரம் என்ற கோரிக்கையை கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் தற்பொழுது எங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |