கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது!

Sri Lanka Police Trincomalee Eastern Province Crime
By Kiyas Shafe Jan 01, 2026 02:20 PM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம்

முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள நிலையில், ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இலஞ்சமாக 10,000 ரூபாயைக் கோரி, அதனை வேறொருவர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது! | Police Inspector Arrested On Bribery Charges

கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து நேற்று (31) மாலை மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இந்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.




GalleryGalleryGallery