ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
மட்டக்களப்பு பிரதேசத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட, தலைமறைவாகி இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று புதன்கிழமை (07) நகர்பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் எனவும், அதே பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம், மிரட்டி 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கியுள்ளதாகுவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மிரட்டி பறிக்கப்பட்ட பணம்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் உப பொலிஸ் பரிசோதகர் கடந்த முதலாம் திகதி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சிவில் உடையில் சென்று, உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் தனக்கு தொடர்பு உள்ளதாகவும் அதனால் கொழும்பில் இருந்து தன்னை சென்று சோதனையிடுமாறு தெரிவித்துள்ளதாகவுத் கூறி அறைகளில் வாடகைக்கு இருந்தவர்களை சோதனையிட்டு அவர்களை மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய போது, ஹோட்டல் முதலாளியிடம் இருந்து அவ்வளவு பணம் என்னிடம் இல்லை எனவும் தற்போது 30 ஆயிரம் ரூபாய் மாத்திரமே உள்ளது என கூறியதை தொடர்ந்து அந்த 30000 ரூபாயினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து தனக்கு 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் தருமாறு கோரிய நிலையில், தன்னிடம் இப்போது அந்த தொகை பணம் இல்லை 30 ஆயிரம் ரூபா தான் உள்ளது என தெரிவித்த நிலையில் அதனை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்சமாக வாங்கி எடுத்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த ஹோட்டலில் பொருத்தி இருந்த CCTV இல் ஒலியுடன் பதிவான வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட உதவி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இலஞ்சமாக பெற்ற 30000 ரூபாயினை குறித்த அதிகாரி அவருடன் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பி ஹோட்டல் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
தலைமறைவு
மேற்குறிப்பிட்ட விடயங்களை மீண்டும் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் பின்னர் அவர் கடமைக்கு செல்லாது தலைமறைவாகியுள்ளார்.
இதன் காரணமாக கடந்த 5ஆம் திகதி கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரால் இலஞ்சம் பெற்ற அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று மோட்டார் வாகனத்தில் சென்ற அவரை பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
மேலும், குறித்த கைது செய்யப்பட்ட அதிகாரியினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |