குறைந்து வரும் பூமியின் நேரம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
By Thulsi
பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.
கணினி பயன்பாட்டில் அதிக தாக்கம்
திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்களினால் பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.