விஷப் பாறை மீன்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜானக ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
விஷ மீன்கள் காணப்படும் இடம்
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விஷ மீன் இனம் Gonmaha-Stone Fish என அடையாளப்படுத்தப்படுகிறது.
இந்த பாறைமீன்கள் மணல் அல்லது இடிபாடுகள் நிறைந்த பாறை அடுக்குகள், ஆழமற்ற தடாகங்கள் மற்றும் குறைந்த அலைகள் உள்ள சிறிய குளங்களில் காணப்படும்.
இவை மெதுவாக இயங்கும் மீன்கள் என்பதால் பெரும்பாலும் மறைக்கப்பட்டு மற்றும் சில நேரங்களில் பாசிகளால் மூடப்பட்டிருக்கும்.
முதுகில் அதிகளவான எலும்புகள்
இந்த மீன்கள் இனப்பெருக்க நோக்கத்திற்காக கரைக்கு வருகின்றன. இவற்றின் முதுகில் அதிகளவான எலும்புகள் இருப்பதுடன் அவை மிகவும் விஷத்தன்மை பொருந்தியவை.
எனவே கடலில் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறும், கடற்கரைப் பகுதிக்கு செல்லும் போது செருப்பு அணிந்து செல்லுமாறும் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |