மொட்டுக் கட்சியை பலப்படுத்த நடத்தப்படும் கூட்டங்களை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

SLPP Johnston Fernando Mahinda Rajapaksa Namal Rajapaksa Sri Lanka Politician
By Fathima Apr 22, 2023 08:02 AM GMT
Fathima

Fathima

மொட்டுக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பலப்படுத்துவதற்காக நாமல் ராஜபக்சவும் ஜோன்சன் பெர்னாண்டோவும் களத்தில் குதித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பரிதாபம் என்னவென்றால், அந்தந்த மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அந்தக் கூட்டங்களைப் புறக்கணிப்பது தான்.

மொட்டுக் கட்சியை பலப்படுத்த நடத்தப்படும் கூட்டங்களை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Plight Of Mahinda Eldest Son

கூட்டங்களை புறக்கணிக்கும் எம்.பிக்கள்

மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனக பண்டார, பிரமித்த பண்டார, ரோஹன திஸாநாயக்க ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கலந்துகொள்ளவில்லை.

கம்பஹா மாவட்டத்துக்கான கூட்டம் பியகமவில் இடம்பெற்றபோது கட்சியின் மாவட்டத் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.