பாடசாலை மைதானத்தில் திடீரென தரையிறங்கிய உலங்குவானூர்தியினால் அமைதியின்மை
கபிலித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயமொன்றுக்கு புற்று நோயாளரை அழைத்துச்செல்வதற்காக உலங்குவானூர்தி ஒன்று நேற்று வந்தமையால் அப்பகுதியில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
உலங்குவானூர்தியில் சிலர் சட்டவிரோத செயலில் ஈடுபட வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகித்ததால் அமைதியின்மை ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான உலங்குவானூர்தி அப்பகுதியிலுள்ள ஆலயமொன்றில் புற்று நோயாளர் ஒருவருக்கு பூஜை கொடுப்பதற்காக வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெளியான காரணம்
இதன்போது நோயாளி திரும்பிச்செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், அவரை ஒரு தனியார் நிறுவனத்தின் உலங்குவானூர்தியில் அழைத்து வர உறவினர்கள் பணம் கொடுத்து ஏற்பாடு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த உலங்குவானூர்தி அருகில் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தரையிறங்கியதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு நிலைமையை தெளிவுபடுத்தியதையடுத்து பதற்றமான சூழல் தணிந்துள்ளது.