பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை : முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran Jul 11, 2024 09:48 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு சரிய திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 2005 ஆம் ஆண்டு முதல் சிசு சரிய திட்டத்தை பாடசாலை மாணவர்களுக்கு மானிய கட்டண முறையின் கீழ் மிகவும் நம்பகமான பேருந்து சேவையை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கியது.

இதன் மூலம் பாடசாலை மாணவர்கள், மன மற்றும் உடல் அசௌகரியம் இன்றி சரியான நேரத்தில் பாடசாலைக்கு சென்று கல்வி கற்று முடித்து விட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல முடியும்.

பேருந்து சேவை

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 1,537 பாடசாலை பேருந்து சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை : முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Plan To Expand Bus Service For Students

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 500 புதிய பேருந்து சேவைகளை ஆரம்பிக்க தேவையான 202 மில்லியன் ரூபாவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் இருந்து ஒதுக்குவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW