மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள பியுமி ஹன்சமாலி

Piumi Hansamali Crime Branch Criminal Investigation Department
By Mayuri Jul 10, 2024 01:36 PM GMT

தமக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தடுத்து உத்தரவிடுமாறு கோரி மொடல் அழகி பியுமி ஹன்சமாலியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

நியாயமற்ற விசாரணை

தமக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் விதம் நியாயமானதாக இல்லை என்றும், அவர்கள் கடும் பாரபட்சமாக செயற்படுவதாகவும் பியுமி ஹன்சமாலி அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள பியுமி ஹன்சமாலி | Piumi Hansamali Petition To The Appellate Court

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW