இங்கிலாந்தில் அதிசய புறா: வைரலாகும் புகைப்படம்
உலகம் எங்கும் புறாக்கள் அதிகமாகவும் பல்வேறு அளவுகளில் அவை காணப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின் புகைப்படம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் துடிப்பான இறகுகளுடன் கூடிய இந்த புறாவை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்தில் ஆழ்துள்ளனர்.
வைரலாகும் புறா
குறத்த புறாவை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து அது வைரலாகி வருகிறது.
புறாவின் இந்த தோற்றம் மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
தனித்துவமாக இந்த நிறம் உருவானதா? அல்லது யாரேனும் புறா மீது சாயத்தை பூசினார்களா? அல்லது புறா அதன் நிறத்தை மாற்றியமைக்கும் பொருள் மீது விழுந்ததா? என பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் கேட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |