கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் வழக்கில் பிள்ளையான் கைது
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் பிள்ளையான்(Pillayan) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் (CID) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலளத்தில் வைத்து நேற்று (08) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவு
கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த வேளையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், குறித்த கடத்தல் சம்டபவத்துடன் சம்பந்தப்படுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வாறு பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |