தொலைபேசி பாவனையால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்: ஆய்வில் வெளியான தகவல்

United Kingdom World
By Mayuri Jun 30, 2024 10:51 AM GMT
Mayuri

Mayuri

குழந்தைகள் அதிக நேரம் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனநல பாதிப்புக்கள் ஏற்படுவதாக இங்கிலாந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் வெளிக்கள விளையாட்டுக்களை புறக்கணித்துள்ளதால் உடற்பயிற்சி இன்றி உடல் பருமன் அதிகரிப்பதாகவும், பின்னர் சிறுவயதிலேயே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்படும் பாதிப்பு

கையடக்க தொலைபேசி பாவனையால் குழந்தைகளுக்கு தூக்கம் கெட்டு அவர்கள் பகல் நேரத்தில் கூட ஒருவித கலக்கத்திலேயே இருக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படகிறது.

தொலைபேசி பாவனையால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்: ஆய்வில் வெளியான தகவல் | Phones Are Changing Children S Behavior

நாட்பட்ட தூக்கமின்மை, குழப்ப மனப்பான்மை, பதற்றம், எந்த வேலையும் செய்ய முடியாத சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தங்கள் வயதுக்கு பொருத்தமற்ற நண்பர்கள் அல்லது குழுவில் பகிர்ந்து கொள்ளும் பொருத்தமற்ற செய்திகள், தேவையற்ற படங்கள் அல்லது உரையாடல்களை காணும் போது அவர்கள் சிறு வயதிலேயே சமூக பிறழ்வான நடத்தைகளை நோக்கி நகரும் அபாயம் உருவாகுவதாக கூறப்படுகிறது.

உடற்பிரச்சினைகள்

மேலும், கை விரல் எலும்பு, கழுத்து எலும்பு தேய்மானம், கண்களில் வறட்சி மற்றும் பார்வைத்திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொலைபேசி பாவனையால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்: ஆய்வில் வெளியான தகவல் | Phones Are Changing Children S Behavior

இந்நிலையில், இரவில் தாமதமாக உறங்க செல்பவர்களுக்கு நோய் எதிர்ப்புதிறன் குறைவு, சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பு, கவனக்குறைபாடு, ஞாபக மறதி ஆகியவை ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW