அலைபேசிகளின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
Sri Lanka
Smart Phones
Income Tax Department
Budget 2024 - sri lanka
By Madheeha_Naz
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்த சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டில் அலைபேசிகளின் விலைகள் அதிகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அலைபேசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வு
ஏற்கனவே அலைபேசிகளின் விலைகள் உயர்வடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த விலை அதிகரிப்பு மேலும் உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.