மட்டக்களப்பில் அதிரடி சுற்றிவளைப்பு! 13கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Public Health Inspector
By Rakshana MA Mar 12, 2025 11:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்தை மீறிய 13 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளினால் நேற்று(11) இரவு திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உணவு விடுதிகள் மற்றும் உணவு உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

சுகாதார நடவடிக்கை 

அதிகளவான மக்கள் வசிக்கும் மாமாங்கம் பொதுச்சுகாதர பிரிவு மற்றும் இருதயபுரம் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் அதிரடி சுற்றிவளைப்பு! 13கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Phi Raid On Batticaloa Restaurants

இதன்போது மாமாங்கம் பொதுச்சுகாதர பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று இருதயபுரம் பொதுச்சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய வகையில் உணவு உற்பத்திகளுக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மீட்கப்பட்டதுடன் பாவனைக்குதவாத பொருட்களும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி!

வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலர் பெறுமதி!

மாணவர்களுக்கான கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளியான அறிவித்தல்

மாணவர்களுக்கான கொடுப்பனவுத் தொகை தொடர்பில் வெளியான அறிவித்தல்

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 



GalleryGalleryGalleryGalleryGallery