40 எரிபொருள் நிலையங்களை பூட்டுவதாக அறிவித்தார் எரிசக்தி அமைச்சர்

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis Petrol diesel price National Fuel Pass
By Thahir Apr 06, 2023 09:34 AM GMT

கலந்துரையாடல்

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் அனைத்து சிலோன் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கும் சொந்தமான எரிபொருள் டேங்கர்களுக்கும் GPS கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும், பின்னர் அனைத்து தனியார் டேங்கர்களுக்கும் இந்த செயல்முறை செயல்படுத்தப்படும் என்றும் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் ஆகியவற்றுடன் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக QR கோட்டாவைக் கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறினார்.

சேமிப்பு கொள்ளளவு

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார். 

அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% சேமிப்பு கொள்ளளவை பராமரிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

40 எரிபொருள் நிலையங்களை பூட்டுவதாக அறிவித்தார் எரிசக்தி அமைச்சர் | Petrol Sheds In Sri Lanka