எரிபொருட்களின் விலையில் மாற்றம்! வெளியான அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இலங்கை பெற்றொலிய வளக்கூட்டுத்தாபனம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது, இதன்படி புதிய விலை 348 ரூபாவாகும்.
விலையில் மாற்றம்
95 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது, இதன்படி புதிய விலை 375 ரூபாவாகும்.
இலங்கை வெள்ளை டீசல் லீற்றர் ஒன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது, இதன்படி புதிய விலை 306 ரூபாவாகும்.
இலங்கை சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளது, இதன்படி புதிய விலை 358 ரூபாவாகும்.
ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை லீற்றர் ஒன்று 10 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதிய விலை 226 ரூபாவாகும்.