எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..!
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எரிபொருள் விலைத்திருத்தமானது மாதத்தின் முதலாம் திகதி முன்னெடுக்கப்பட்டு வந்தது.
என்ற போதும் கடந்த முறை விலை திருத்தம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.
குறித்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நின்றிருந்தன.
எரிபொருள் கையிருப்பை பேணாமையால் ஏற்பட்ட சிக்கல்
எரிபொருள் விலை மாற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை பேணாமையே அதற்கான காரணமாக அமைந்திருந்தது.
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விலை திருத்தம் நடைபெறும் வரையில் எரிபொருளை முன்பதிவு செய்யாதிருந்தமை பிரதான விடயமாக இருந்த நிலையில் விலை திருத்தத்திற்கான திகதியை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.