அதிகரிக்கவுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பாரிய அளவில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்
அதிகரிக்கப்பட உள்ள VAT வர காரணமாக எரிபொருள் விலையானது 420 ரூபாவை தாண்டுமென சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (16.11.2023) உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரிய அளவில் உயரும்
தொடர்ந்து உரையாற்றுகையில், அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க சபையில் தெரிவித்திருந்தார்.
அப்படியென்றால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பாரிய அளவில் உயரும்.
எனவே உங்களிடமிருந்து நான் பதிலை அறிய விரும்புகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசுமண எழுப்பிய கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க எவ்வித பதிலையும் வழங்காமல் சிரித்துக்கொண்டார்.
அதனைத்த தொடர்ந்து பதிலளித்த ஜெயசுமண அப்படியானால் அது இருக்கும் என்று நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் லீட்டருக்கு 420 ரூபாவாக அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம் என ஜெய சுமண தெரிவித்துள்ளார்.