ஹிருணிக்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

Colombo Supreme Court of Sri Lanka Hirunika Premachandra Crime
By Rukshy Jul 11, 2024 09:06 AM GMT
Rukshy

Rukshy

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை, ஜூலை 15 இல், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

விசாரணைக்கு எடுக்க முடிவு

எனவே, இந்த வழக்கை ஜூலை 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

தெமட்டகொடையில் டிபென்டர் வாகனத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தியதுடன் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலே ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாகக் காணப்பட்டார்.

ஹிருணிக்காவின் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம் | Petition In Hirunika Court

ஹிருணிக்கா பிரேமச்சந்திர இந்த வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாவார். அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததால், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW