ரணிலின் தகைமையை சவாலுக்கு உட்படுத்திய மனு! நிராகரித்தது உயர் நீதிமன்றம்

Ranil Wickremesinghe
By Mayuri Aug 28, 2024 11:26 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தகுதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரித்துள்ளது.

சட்டத்தரணி ஒருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதியரசர்களையும் பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்ககத் தவறியதன் ஊடாக அவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினரை சந்தித்து கலந்துரையாடிய ரணில்

மனுதாரரின் கோரிக்கை

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

ரணிலின் தகைமையை சவாலுக்கு உட்படுத்திய மனு! நிராகரித்தது உயர் நீதிமன்றம் | Petition Dismissed By High Court

அத்துடன், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடக்கோரியும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே, மனுவில் தவறான தகவல்கள் இருப்பதாகவும், அரசியலமைப்பின் 92வது சரத்தை மீறுவதாகவும் வாதிட்டார்.

வாதங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், 50 ஆயிரம் ரூபாய் வழக்கு கட்டணத்துக்கு உட்பட்டு மனுவை நிராகரித்தது.

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

அம்பாறையில் ஹக்கீம், ரிஷாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW