போலி அழகு சாதனப் பொருட்கள் விற்பனை: நபரொருவர் கைது

Sri Lanka Police India
By Mayuri Aug 27, 2024 10:34 AM GMT

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதனப் பொருட்களின் பெயர்களை பயன்படுத்தி போலி அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் கைது

இந்த விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 03 இலட்சம் ரூபா பெறுமதியான 27 வகையான கிரீம்கள் மற்றும் லோசன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி அழகு சாதனப் பொருட்கள் விற்பனை: நபரொருவர் கைது | Person Who Sold Fake Beauty Products Was Arrested

பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW