வாழைச்சேனையில் 4 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் 4 கஜமுத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (30) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலை- மூதூரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு கஜமுத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட நபரை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 4 கஜ முத்துக்களை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |