யாழ். பனிப்புலம் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Jaffna
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் - பனிப்புலம் பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது.
நேற்றையதினம் (06.10.2023) வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
விசேட குற்றத்தடுப்பு பிரிவினர்
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இளவாலை
பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.