வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி - வர்த்தமானி வெளியீடு

Dollar to Sri Lankan Rupee Ranjith Siyambalapitiya Economy of Sri Lanka Dollars
By Fathima Aug 13, 2023 08:57 AM GMT
Fathima

Fathima

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய, இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளனர்.

வாகன இறக்குமதி

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி - வர்த்தமானி வெளியீடு | Permission To Import Vehicles Sri Lanka

எப்படியிருப்பினும் தற்போதுள்ள அந்நியச் செலாவணி கையிருப்புடன் ஒப்பிடுகையில் மற்ற வாகனங்களின் இறக்குமதி மேலும் தாமதமாகும் என நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதியை துரிதப்படுத்துவதன் மூலம் டொலரின் பெறுமதி மீண்டும் உயர முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.