யாழில் மழைநீர் சேமிக்கும் தாங்கிகள்: கிடைத்தது அனுமதி
Jaffna
India
By Mayuri
யாழ். மாவட்டத்தில் மழைநீரை சேமிப்பதற்காக 934 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்கக்கூடிய 3 ஆயிரம் தாங்கிகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கத்துடன் 2016ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்தானது.
கால அவகாசம் நீடிப்பு
இந்த திட்டத்தினை 3 வருடங்களில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நிதி மற்றும் தொழிநுட்ப பிரச்சினைகளால் இந்த வருடம் ஜூன் மாதம் வரை அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
இந்தநிலையில், அவ்வேலைத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள நிதியில் 934 கிணறுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |