மூதூர் மற்றும் தோப்பூர் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு! எம் எஸ் தௌபீக் எம்.பி நடவடிக்கை(Photos)
பல வருடங்களாக மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் எதிர்நோக்கிவருகின்ற குடிநீர் பிரச்சினையின் உண்மைத் தணமையை இனம்கண்டு அதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பி நீலாப்பொல நீரேற்றும் நிலையத்திற்கு (Intake Pumping Station) விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தினை இன்று (03.05.2023) மேற்கொண்டுள்ளார்.
இதன்போது நீரேற்றும் நிலையத்திற்கு மகாவெளி நீர் வருவதில்லை, தற்பொழுது நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரேற்றும் இடத்திற்கு நீர் கொண்டுவரப்படுகிறது என்பதையும் நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு ஏதாவது கோளாறு ஏற்படுமாக இருந்தால் நீர்விநியோகம் தடைப்படும் என்பதை அறிந்துகொண்டுள்ளார்.
நிரந்தர தீர்வு
மேலும் இப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு திட்டவரைவொன்றினை கிழக்கு மாகாண பிரதிப் பொதுமுகாமையாளரிடம் கோரியுள்ளதாகவும் விரைவில் உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களில் அனுமதியைப்பெற்று நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விஜயத்தின்போது உதவிப் பொறியியளார்களான அறபாத் மற்றும் சர்ஜூன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.



