இலங்கையில் பல்கலைக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்: வெளியான காரணம்

University of Peradeniya Sri Lanka Education
By Renuka Jul 31, 2023 05:54 AM GMT
Renuka

Renuka

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவமிக்க விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் பல பீடங்களின் அன்றாட நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உள்ளகத் தகவல்கள் தெரிவித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே வரை 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்கலைக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்: வெளியான காரணம் | Peradeniya University Lecturers And Professors

வெளியேறிய முன்னணி பேராசிரியர்கள் 

இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்திடம் வினவிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, பேராசிரியர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது அதிரித்து வருகின்றது.

இது முக்கியமாக மருத்துவம், பொறியியல், அறிவியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களைப் பாதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையான 16 மாத காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 70 முன்னணி பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு முற்றாக வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர்.

படிப்பு விடுப்பில் ஏராளமானோர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW