பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் எடுத்துள்ள விபரீத முடிவு
University of Peradeniya
University of Sri Jayawardenapura
Sri Lanka
By Fathima
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவரின் சடலம் நேற்று (16.06.2023) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.