பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Trincomalee Eastern Province General Election 2024 National People's Power - NPP
By Laksi Oct 24, 2024 09:09 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இன, மத, பேதம் பாராமல் நல்லவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் தெரிவித்துள்ளார்.

எம்.கே.எம்.சப்றானின் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்றையதினம் (24) காலை மூதூர்  - ஆஸாத்நகர், ஜின்னாநகர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த எம்.கே.எம்.சப்றான், திருகோணமலை மாவட்டத்தில் நாம் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

மக்களினுடைய பிரச்சினை

வேறு கட்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இனவாத கருத்துகளை கூறி மக்களின் வாக்குகளை பெற்றவர்களால் இன்னும் மக்களினுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.

பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | People Ready To Defeat Racism Npp Candidate Sapran

திருகோணமலை மாவட்டத்தில் இன்றும் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே கிடப்பில் காணப்படுகின்றன. குறிப்பாக வைத்தியசாலைகளை எடுத்துக் கொண்டால் அங்கும் கூட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

நோயாளிகள் கட்டில்கள் இல்லாமல் தரையில் படுக்கும் நிலை உள்ளது. அதேபோன்று பாடசாலைகளை எடுத்துக் கொண்டால் நவீன மயப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் இல்லாமல் இருக்கின்றன.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு

இனவாதம்

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகள் இன்றும் காணப்படுகின்றன. மக்கள் இன்று இனவாதத்தை தோற்கடிப்பதற்கு தயாராக உள்ளனர். நிச்சயமாக இனவாதம், பிரதேச வாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

பொதுத் தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | People Ready To Defeat Racism Npp Candidate Sapran

மக்கள் இம்முறை முதல் முதலாக இளைஞர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழராகவோ முஸ்லிமாகவோ சிங்களவராகவோ இருக்கலாம்.

இன, மத, பேதம் பாராமல் நல்லவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த நிலையிலேயே மக்கள் தற்போது உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள கங்கை நீர் மட்டம் - வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

அதிகரித்துள்ள கங்கை நீர் மட்டம் - வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW