நியூசிலாந்தை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற்றம்

New Zealand Australia England World
By Laksi Aug 13, 2024 02:59 PM GMT
Laksi

Laksi

வரலாறு காணாத வகையில் அதிகளவான மக்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மக்கள் வேலையின்மை அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூசிலாந்து அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விபரங்கள் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப் பதிவு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப் பதிவு

பொருளாதார வீழ்ச்சி

இந்த நிலையில்,  ஜூன் மாதம் காலாண்டில் சுமார் 131,200 பேர் நியூசிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற்றம் | People Leaving New Zealand

அத்தோடு, நியூசிலாந்துக்கு குடியேறுபவர்களை விட அந்த நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார வீழ்ச்சியால் விரக்தியடைந்த நியூசிலாந்து நாட்டவர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த பிற நாடுகளை நோக்கிச் செல்வதாகப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் தொடர்பான அரசாங்கத்தின் புதிய சீர்த்திருத்தங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW