கடமையை பொறுப்பேற்பதில் குழப்பநிலை : வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா
புதிய இணைப்பு
சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா நீண்ட வாத விவாதங்களின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில் வைத்திய அத்தியட்சகராக முன்னர் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.
நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு யாழ்ப்பாணத்துக்கு வரும்போது இது தொடர்பில் முடிவு எட்டப்பட்டும் எனவும் இராமநாதன் அர்ச்சுனா நம்பிக்கை வெளியிட்டார்.
முதலாம் இணைப்பு
சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக இன்று மீண்டும் பொதுமக்கள் கூடலாம் என்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், இதனையும் மீறி சாவகச்சேரி பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
மேலும், குறித்த பகுதியில் பரபரப்பான ஒரு சூழல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
வடக்கு மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் (leave ) கொழும்பு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடினர்.
மக்களை அச்சுறுத்தும் செயற்பாடு
இதன்போது அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |