கிளிநொச்சியில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண்களுக்கு தண்டப்பணம் விதிப்பு
கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கு 22,000 தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்கு உட்பட்ட ஊரியான் இரண்டாம் யூனிட் பகுதியில் நான்கு போத்தல் கசிப்பு மற்றும் இரண்டு போத்தல் கசிப்பு என்பவற்றை உடைமையில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
குறித்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான்
நீதிமன்றில் நேற்று (24.08.2023) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு
இதற்கமைய நான்கு போதல் கசிப்பினை உடமையில் வைத்திருந்த குறித்த பெண்ணுக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பெண்களும் கசிப்பு விற்பனைகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பிரதேச மக்களால் ஏற்கனவே தொடர்ச்சியாக பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர்களிடம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.