பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக மூதூரில் அமைதி பேரணி
Trincomalee
Eastern Province
Palestine
By Dev
பலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளில், திருகோணமலை மூதூரில் அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூதூர் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் இந்தப் பேரணியை நேற்று வெள்ளிக்கிழமை(05) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் - அக்கரைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமான பேரணி, பிரதான வீதியூடாகச் சென்று, மூதூர் பிரதேச செயலக முன்றலை சென்றடைந்தது.
அமைதிப் பேரணி
அமைதிப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இந்த பேரணியில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.