பேருந்துகளில் இன்று முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை!

Sri Lanka Transport Fares In Sri Lanka Sri Lanka Bus Strike
By Fathima Nov 24, 2025 08:01 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

திட்டம் 

கொழும்பு புறநகர் பகுதியான கொட்டாவ - மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இந்தத் திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பேருந்துகளில் இன்று முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை! | Pay Bus Fares Through Bank Cards Sl

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தகவலின்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 20 வழித்தடங்கள் உள்ளடக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டண முறை

இதில் 3 முக்கிய மாகாணங்களுக்கு இடையேயான வழித்தடங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

பேருந்துகளில் இன்று முதல் அறிமுகமாகும் புதிய நடைமுறை! | Pay Bus Fares Through Bank Cards Sl

காலி, மாத்தறை மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இந்த டிஜிட்டல் கட்டண முறையை அனுபவிக்கும் முதல் குழுவினராக இருப்பார்கள்.

இந்தத் திட்டத்திற்காக, ஐந்து முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகள் ஏற்கனவே தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.