அவுஸ்திரேலியாவில் புர்கா அணிந்து சபைக்குள் நுழைந்த பௌலின் ஹான்சனால் ஏற்பட்ட பரபரப்பு
அவுஸ்திரேலியாவின் செனட் சபைக்குள் வலதுசாரி செனட்டர் பௌலின் ஹான்சன் புர்கா அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவடிக்கைகள் நேற்று (24) ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சபைக்குள் முக மறைப்பை அகற்ற மறுத்துவிட்டமையால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பௌலின் ஹான்சனின் செயல்
இதனை தொடர்ந்து நேற்றைய அமர்வில் இருந்து அவர் நாள் முழுவதும் விலக்கிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது செயல்களை அனைத்து கட்சிகளின் செனட்டர்களும் பரவலாகக் கண்டித்துள்ளதுடன் செனட்டர் பௌலின் ஹான்சனின் செயல் அவமரியாதைக்குரியது என பிற செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பெண்கள் தவறாக நடத்தப்படுவதை முன்னிலைப்படுத்தவே பர்தா அணிந்திருந்ததாக பௌலின் ஹான்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பரவலான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

