புதிய கடவுச்சீட்டு விநியோகம்: விசேட அம்சங்கள் தொடர்பில் வெளியான தகவல்
புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்று முதல் ஆரம்பமான நிலையில், பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் விநியோகிக்கப்படும் புதிய சாதாரண கடவுச்சீட்டானது கரு நீல நிறத்தைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டின் விசேட அம்சங்கள்
அத்துடன் புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளது. அந்த கடவுச்சீட்டு உள்பக்கங்களில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டு விரைவில் விநியோகிக்கப்படும் எனவும், மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த கடவுச்சீட்டுக்களை இறக்குமதி செய்வதற்காக விலை மனு கோரல் முறைமைக்கமைய செயற்படவுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |