இந்திய கடற்தொழிலாளர்களுக்கான பாஸ் விவகாரம்: ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு
இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கல் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்ப்பதாக ஊர்காவற்றுறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களுக்கு பாஸ் நடைமுறை வழங்கப்படும் என்கிறார் பிரதமர், எனினும் இல்லை என்கிறார் கடற்றொழில் அமைச்சர்.
எனவே வடபகுதி மீனவர்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இந்திய கடற்தொழிலாளர்களுக்கு பாஸ் வழங்குவது தொடர்பாக சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஜனாதிபதியின் பதிலை எதிர்பார்க்கிறோம்.
இலங்கை இந்திய கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.