நஸீர் அஹமட் தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சுற்றாடல் அமைச்சர் அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பினை இன்று (06.10.2023) உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கட்சி உறுப்புரிமை
கட்சியின் தீர்மானத்தினை மீறி 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தனது கட்சி உறுப்புரிமையை பறித்தமைக்கு எதிராக நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதன்படி குறித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் கட்சியில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உத்தரவிட்டுள்ளது.
![காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்: யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - செய்திகளின் தொகுப்பு](https://cdn.ibcstack.com/article/0f911982-c54f-49d4-ae8a-98233d1f9ed8/23-651f96385ec4e-sm.webp)
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்: யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |