பங்காளதேஷில் நாடாளுமன்ற தேர்தல்! வெளியான அறிவிப்பு

Sheikh Hasina India Bangladesh
By Fathima Dec 13, 2025 01:02 PM GMT

பங்காளதேஷில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி பங்காளதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசிர் உத்தின் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 

பங்காளதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

பங்காளதேஷில் நாடாளுமன்ற தேர்தல்! வெளியான அறிவிப்பு | Parliamentary Elections In Bangladesh

இதன்பின்னர் அங்கு தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது.

இந்த நிலையிலே தற்போது பங்காளதேஷில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.