பொதுத் தேர்தல் தொடர்பில் 600 முறைப்பாடுகள் பதிவு
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 385 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
முறைப்பாடுகள்
அத்தோடு, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 15 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள் கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |