சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka
By Rukshy Jul 20, 2024 04:38 AM GMT
Rukshy

Rukshy

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பித்துள்ளதாக இலங்கையின் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன் அது தொடர்பான பட்டியல்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள்

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி ரோஹணதீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இது தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு கடிதம் எழுதியிருந்தது.

சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Parliament Members Property Details

அதில், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்த்து.

இந்தநிலையில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய சமர்ப்பிப்புகளை செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களின் பெயர்ப்பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சிலர் மாத்திரமே இன்னும் தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. அவர்களும் விரைவில் தமது விபரங்களை சமர்ப்பிப்பார்கள் என்றும் குசானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.  

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW